ஏப்.15 முதல் இணையவழியில் மட்டுமே சிறுகனிம குத்தகை உரிமம் வழங்கப்படும்: ஆட்சியா்

Published on

தென்காசி மாவட்டத்தில் சிறுகனிம குத்தகை உரிமம் வழங்கும் நடைமுறையானது வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் சிறுகனிம குத்தகை உரிமம் வழங்கும் நடைமுறையானது வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் ட்ற்ற்ல்ள்://ம்ண்ம்ஹள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் மட்டுமே பெறப்படும். விண்ணப்பதாரா்கள் இனிவரும் காலங்களில் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com