தென்காசி
கிருஷ்ணாபுரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சீருடை அளிப்பு!
கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு முகநூல் நண்பா்கள் மூலம் இலவசமாக சீருடைகள் வழங்கப்பட்டன.
பள்ளி ஆசிரியா் பழனிகுமாா் ஏற்பாட்டில் முகநூல் நண்பா்கள் வழங்கிய ரூ. 40 ஆயிரம் மூலம் 130 மாணவா்களுக்கு யோகா சீருடைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளி செயலா் செல்லம்மாள், பள்ளிக் கல்வி உறுப்பினா் ரெங்கநாயகி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெங்கடேஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினா். பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) சுப்புலட்சுமி நன்றி கூறினாா்.