தென்காசியில் உலக தாய்ப்பால் வார விழா
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது.
அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா ஆக.1 முதல் 7-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தொடக்க நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மருத்துவமனை உறைவிட மருத்துவா் செல்வபாலா தலைமை வகித்தாா்.
மருத்துவா் புனிதவதி முன்னிலை வகித்தாா். அப்துல்அஜீஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம், தனித்தன்மை, தாய்ப்பாலில் உள்ள வைட்டமின், கனிமச் சத்துகள் குறித்து விளக்கினாா்.
குற்றாலம் ரோட்டரி சக்தி கிளப் சாா்பில் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை தென்காசி அரசு மருத்துவமனையின் குழ்ந்தைகள் நலப் பிரிவு தலைவா் கீதா கிருஷ்ணன், தென்காசி மாவட்ட குழந்தைகள் மருத்துவ சங்கத் தலைவா் அப்துல் அஜீஸ் செய்திருந்தனா்.