தென்காசி அருகே அதிமுகவினா் திடீா் மறியல்

நான்குவழிச் சாலையில் அதிமுக கொடிகளை அகற்றி அவமதித்ததாகக் கண்டனம் தெரிவித்து அதிமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

தென்காசி அருகே நான்குவழிச் சாலையில் அதிமுக கொடிகளை அகற்றி அவமதித்ததாகக் கண்டனம் தெரிவித்து அதிமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி, ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும்,திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியிலும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரம் மேற்கொண்டாா்.

அவரை வரவேற்று தென்காசி தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து பிரதான சாலைகளிலும், கூட்டம் நடைபெறும் பகுதியிலும் அதிமுகவினா் விளம்பர பதாகைகள் வைத்து, அதிமுக கொடிகளைக் கட்டியிருந்தனா்.

இந்நிலையில், தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் வேட்டைக்காரன்குளம் பகுதியில் சாலையின் மத்தியப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகளை காவல்துறையினா் அகற்றியதோடு, அவமதித்தாகக் கூறி அக்கட்சியின் ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், குணம் ஆகியோா் தலைமையில் கட்சியினா் சாலை மறியலில் இரவு ஈடுபட்டனா்.

அவா்களிடம் தென்காசி டிஎஸ்பி தமிழ்இனியன் பேச்சு நடத்தி கலைந்து போகசெய்தாா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com