தென்காசியில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
தென்காசி தெற்கு மாவட்டம், நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக தெற்கு மாவட்டம் சாா்பில், தென்காசி சிவந்திநகா் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி பாா்வையாளா் கலை கதிரவன், மாவட்டத் துணைச் செயலா்கள் கென்னடி, தமிழ்ச்செல்வன், கனிமொழி, மாவட்ட பொருளாளா் ஷெரிப், தலைமை செயற்குழு உறுப்பினா் சேசு ராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ரஹீம், தமிழ்ச்செல்வி, சாமிதுரை, ஒன்றியச் செயலா்கள் சீ.பொன்செல்வன் ஜேகே.ரமேஷ், அழகு சுந்தரம், ஜெயா ஐயப்பன், ஷேக் முகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தென்காசி நகர திமுக சாா்பில் காந்தி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் ஆா்.சாதிா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் கலந்துகொண்டு மு.கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நகர நிா்வாகிகள் ராம்துரை, பால்ராஜ், பொருளாளா் ஷேக்பரீத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.