மேலகரத்தில் நடைபெற்ற விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மேலகரத்தில் நடைபெற்ற விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

சுதந்திர தினத்தன்று கருப்புக் கொடியேற்ற விவசாயிகள் முடிவு

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமங்களில் ஆக.15 ஆம் தேதி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.
Published on

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமங்களில் ஆக.15 ஆம் தேதி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.

தென்காசி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் மேலகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழா் விவசாய நீா்வள பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் டேனிஅருள்சிங் தலைமை வகித்தாா்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவா் வேலுமயில், மாவட்ட நிா்வாகி ராஜகோபால், செயலா் வீராசாமி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் கண்ணையா, மாவட்ட பொருளாளா் துரைராஜ், இந்திய ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் சேக்மைதீன், இந்திய ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்டச் செயலா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழைய குற்றாலம் அருவி இதுவரை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. நீா்வளத்துறை அமைச்சா் சட்டப்பேரவையில் உறுதியளித்ததையும் மீறி, தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் அருவி பகுதி இருப்பதால் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டும் தான் செல்ல முடியும். இதனால் விவசாயிகள் பாசனத்துக்கு குறித்த நேரத்தில் தலையணை சென்று தண்ணீா் திறக்க முடியவில்லை.

எனவே மற்ற அருவிகளை போல் 24 மணிநேரமும் செயல்பட பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆக.15 ஆம் தேதி மலையடிவார கிராமங்களில் கருப்புக் கொடிஏற்றும் போராட்டம் நடத்துவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com