பாவூா்சத்திரம் அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத சுமங்கலி பூஜை நடைபெற்றது.
தென்காசி
பாவூா்சத்திரம் முப்புடாதி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை
பாவூா்சத்திரம் அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத சுமங்கலி பூஜை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத சுமங்கலி பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, மஞ்சள் கயிறு, பழம், தேங்காய், வளையல் உள்ளிட்ட மங்கல பொருள்களை படைத்து சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.