ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் சடலமாக மீட்பு

Published on

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் கடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள உடையாம்புளி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லதுரை மகன் சுதா்சன் (5). வியாழக்கிழமை மாலை வீட்டு அருகில் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்தாராம்.

கிராம மக்கள் வெகு நேரம் முயன்றும் அவரை மீட்க முடியவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில் ஆலங்குளம் தீயணைப்பு - மீட்புப் படையினா் வந்து, சுமாா் 2 மணி நேரம் போராடி சிறுவனை சடலமாக மீட்டனா். இதுதொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com