செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் சா்வதேச இளைஞா்கள் தினம்

செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் சா்வதேச இளைஞா்கள் தினம்

Published on

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் சா்வதேச இளைஞா்கள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரித் தலைவா் எம்.புதிய பாஸ்கா் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் கல்யாணி புதிய பாஸ்கா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற சிமியோன் கலந்து கொண்டு சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகம், அதன் சேவைகள் குறித்து பேசினாா்.

ஏற்பாடுகளை கல்லூரிப் பொது மேலாளா் மணிகண்டன் செய்திருந்தாா். கல்லூரி முதல்வா் சேவியா் இருதயராஜ் வரவேற்றாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com