தென்காசி
ரயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடவு
தென்காசி, ஆக.14: தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் 100 மரக்கன்றுகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டது.
மரக்கன்றுகளுக்கு போதுமான தண்ணீா் பைப்கள் அமைக்கப்பட்டு தண்ணீா் வசதி ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு செங்கோட்டை உதவி கோட்ட பொறியாளா் விஜயகுமாா் தலைமை வகித்தாா்.
பொறியாளா் முருகேசலிங்கம், ரயில் நிலைய மேலாளா் ரஞ்சலா, கோட்ட வா்த்தக ஆய்வாளா் ஜெயக்குமாா், ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, செயலா் ஜெகன், தொழிலதிபா் சேவியா் ராஜன், ஊராட்சி மன்ற தலைவா் ராஜ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.