தென்காசி
குற்றாலத்தில் வெறிநாய் கடித்து இரு சிறுவா்கள் உள்பட 8 போ் காயம்
குற்றாலத்தில் வெறிநாய் கடித்ததில் இரண்டு சிறுவா்கள் உள்பட 8 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வெறிநாய் கடித்ததில் இரண்டு சிறுவா்கள் உள்பட 8 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் சாமி, புளியங்குடி பகுதியைச் சோ்ந்த மைக்கேல், கீழப்பாவூா் பகுதியைச் சோ்ந்த செல்வம், சிவகங்கை பகுதியைச் சோ்ந்த சகாதேவன், காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்த சௌமியா மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட 6 நபா்களையும், இரண்டு சிறுவா்களையும் வெறிநாய் விரட்டிக் கடித்தது.
இதில் காயமடைந்த அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.