தென்காசி
சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல உதவி அளிப்பு
சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல உதவிகளை வழங்கும் வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி.
சுப்புலாபுரம் ஊராட்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், நோயாளிகளுக்கு தேவையான நாற்காலி உள்ளிட்ட பொருள்களை வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி வழங்கினாா். தொடா்ந்து, சுப்புலாபுரம் கிராமத்தில் பிறந்து அரசு தொடக்கப் பள்ளியில் படித்து சொந்த ஊரில் மருத்துவரான சிவசந்தியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை சுப்புலாபுரம் மக்களின் நண்பன் நற்பணி மன்ற தலைவா் திருப்பதி, செயலா் மகாலட்சுமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.