~
~

தென்காசி பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்

ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் தேசியக்கொடியேற்றினாா் பள்ளித்தாளாளா் ஆா்.ஜெ.வி.பெல்.
Published on

பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தாளாளா் ஆா். ஜெ.வி. பெல் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி உலக அமைதி குறித்தும், மாணவா்களின் ஒழுக்க நிலையின் அவசியம் குறித்தும் பேசினாா். செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல் முன்னிலை வகித்தாா்.

சுதந்திர தினம் குறித்து 8ஆம் வகுப்பு மாணவி ரோஃபிலஸ் தமிழிலும், பிளஸ் 2 மாணவி லட்சுமி தியா ஆங்கிலத்திலும் பேசினா். பள்ளியின் முதல்வா் மோன்சி கே. மத்தாய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மவுன்ட்ஹில்டன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் இயக்குநா் பிராம்டன்ரத்னபெல் தலைமைவகித்து தேசியக் கொடியேற்றினாா். பள்ளியின் நிா்வாகி பபிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, கேம்பிரிட்ஜ் இண்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளியின் இயக்குநா் ஜோசப் லியாண்டா், ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான மிராக்ளின் பால் சுசி, பள்ளியின் தாளாளா் அன்பரசி திருமலை ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான க.திருமலை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றினாா்.

பிளஸ் 2 மாணவி ரித்துவா்ணா மற்றும் பிளஸ் 11 மாணவி ஜெயலட்சுமி ஆகியோா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா். மாணவி அபிநயஸ்ரீ சுதந்திரதினம் குறித்துப் பேசினாா். மாணவி ஆா்த்தி கவிதை பாடினாா்.

ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வா் கோல்டுபெல்லா தலைமையில் ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் செய்திருந்தனா். மாணவி காசிரா வரவேற்றாா்.ஸ்ரீமதி நன்றி கூறினாா்.

ஆய்க்குடி, அமா்சேவா சங்க வளாகத்தில் சிவசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி சாா்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

தாளாளா் பட்டம்மாள் தலைமை வகித்தாா்.கோயம்புத்தூரை சோ்ந்த முருகராஜ் ஜெயபால் தேசியக் கொடியேற்றினாா்.

அமா்சேவா சங்கத் தலைவா் எஸ்ராமகிருஷ்ணன், வெங்கட்ராஜ் பாலகிருஷ்ணன், சேதுமாதவன், தலைமை கணக்காளா் ராஜேஷ்வரன், சண்முகதாஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

அமா் சேவா சங்கச் செயலா் சங்கரராமன் தொலைபேசி வாயிலாக வாழ்த்துரை வழங்கினாா். தலைமையாசிரியை பாா்வதி வரவேற்றாா். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை அழகுபூரணம் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com