தென்காசியில் ஆக. 22இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக. 22இல் நடைபெறும் என்று ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.
Published on

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக. 22இல் நடைபெறும் என்று ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக. 22 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

20க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதியுடைய தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 04633-213179 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பணி நியமனம் பெற்றாலும் அரசு வேலைவாய்ப்புக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com