தென்காசி
வாசுதேவநல்லூா்: விபத்தில் காயமடைந்த முதியவா் பலி!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
வாசுதேவநல்லூா் பசும்பொன் ஒன்றாம் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் ராமச்சந்திரன் (60). இவா், வெள்ளிக்கிழமை மாலை தென்காசி- மதுரை சாலையில் தேநீா் குடிப்பதற்காக பைக்கில் சென்றாராம்.
அப்போது, தேங்காய் ஏற்றிவந்த டிராக்டா், பைக்கை முந்திச் சென்று திடீரென திரும்பியதாம். இதனால், பைக் நிலைதடுமாறி டிராக்டரின் டிரைலா் மீது மோதியதாம். இதில், காயமடைந்த ராமச்சந்திரனை புளியங்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.