தென்காசி
ஸ்ரீசிவானந்த சிதம்பர சுவாமிகள் குருபூஜை
குருபூஜையை முன்னிட்டு நடைபெற்ற திருவாசகம் முற்றோதலில் பங்கேற்றோா்.
தென்காசி மாவட்டம் இலத்தூரில் ஸ்ரீசிவானந்தசிதம்பர சுவாமிகளின் 114-ஆவது குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குருபூஜை விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு தன ஆகா்ஷன சங்கல்ப பூஜை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், யாகபூஜை, 9 மணிக்கு சித்தா்களின் மகிமை என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு, 10 மணிமுதல் திருவாசகம் முற்றோதல் வேள்வி நடைபெற்றது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் மருத்துவா்கள் நடராஜன், சண்முகம், ஸ்ரீநிதி, கே.கிருஷ்ணவேணி, மாரிசெல்வி தலைமையிலான குழுவினா் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனா்.