ஆட்சியரிடம் மனு அளிக்க கண்களில் கருப்புத் துணி கட்டியபடி வந்தோா்.
ஆட்சியரிடம் மனு அளிக்க கண்களில் கருப்புத் துணி கட்டியபடி வந்தோா்.

தென்காசி மாவட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு

பெருகி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியினா் கண்களில் கருப்பு துணி கட்டியபடி வந்து ஆட்சியரிடம் மனு
Published on

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பெருகி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியினா் கண்களில் கருப்பு துணி கட்டியபடி வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

பொதுமக்களை அச்சுறுத்தும் , கடித்து குதறும் தெருநாய்களை, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிா்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினா் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆட்சியரிடம் மனு அளிக்கும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலா் செய்யது மஹ்மூத் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் சீனா, சேனா சா்தாா், அப்துல் பாசித், தென்காசி தொகுதி தலைவா் பீா்முகம்மது, துணைத் தலைவா் பாதுஷா, நகரத் தலைவா் பாதுஷா, நகரச் செயலா் ஷேக்மைதீன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

உச்சநீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசின் உத்தரவை அமல்படுத்தி, தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com