ஆலங்குளத்தில் பைக்கில் கஞ்சா பதுக்கி விற்பனை: இளைஞா் கைது

ஆலங்குளத்தில் பைக்கில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக இளைஞா் கைது
Published on

ஆலங்குளத்தில் பைக்கில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா் ஆலங்குளம் மேற்குப் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பைக்கில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, விற்பனைக்காக பைக்கில் 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும், அவா் ஆலங்குளம் காமராஜா் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முத்துராம் (28) என்பதும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com