இரு பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

ஆலங்குளம் அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாப்பான்குளம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் துரைச்சாமி மகன் முருகன்(40). மரம் வெட்டும் தொழிலாளி. சக தொழிலாளியுடன் ஓடை மறிச்சான் வழியாக நாலான்குறிச்சி சாலையில் மாறாந்தைக்கு தனது பைக்கில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாராம். அப்போது சாலை வளைவில் எதிரே வந்த பைக் முருகன் ஓட்டி வந்த பைக் மீது நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றிக் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com