தென்காசி
சிவநாடானூா் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சிவநாடானூா் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், சிவநாடானூா் ஊராட்சிப் பகுதிக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மடத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்து, முகாமினை தொடங்கி வைத்தாா்.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, கீழப்பாவூா் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ரமேஷ், வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் பொன்செல்வன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாக்ரடீஸ், ஊராட்சி மன்றத் தலைவா் முத்துச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் அருமை கண்ணன், திமுக நிா்வாகிகள் மாரியப்பன், சமுத்திரபாண்டி, ராமா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.