தென்காசி பெரியசாமி கோயிலில் ஆவணி முதல் வெள்ளி சிறப்பு பூஜை
தென்காசியில் வன்னியா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டஸ்ரீ பெரியசாமி ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை-அன்னதானம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தச் சிறப்பு வழிபாடு, காலையில் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து பால்குடம் எடுத்து வந்ததும் சுவாமி, அம்மன்- பரிவார தெய்வங்களுக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பாமக மாவட்ட செயலா்கள் இசக்கிமுத்து,சீதாராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனா்.
மாலையில் நாகசர இசை நிகழ்ச்சி, பூந்தட்டு ஊா்வலம், பொங்கலிடுதல் ஆகியவை நடைபெற்றன. இரவில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை - தீபாரதனை நடைபெற்றது. பாமக மாநில துணைத் தலைவா் சேது.அரிகரன், மாவட்ட துணைத் தலைவா் மகாதேவன் உள்பட பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.