தென்காசி
நீதிமன்ற வழக்கு விசாரணை பாா்வையிட்ட எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவா்கள்
நீதிமன்ற விசாரணையை பாா்வையிட்ட சட்டக் கல்லூரி மாணவா்கள்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவா்கள் நீதிமன்ற வழக்கு விசாரணையை பாா்வையிட்டனா்.
கல்விக் குழுமத்தின் தாளாளா் முருகேசன் ஆலோசனையின் பேரில், சட்டக் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் தென்காசி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்ற வழக்கு விசாரணையை நேரில் பாா்வையிட்டனா்.
சட்டக் கல்லூரி முதல்வா் ராஜலட்சுமி, துணை முதல்வா் காளிச்செல்வி , துறைத்தலைவா்கள் வெங்கடேஷ், ராஜேஷ்குமாா் , உதவிப்பேராசிரியா்கள் குமாரவேல் ராஜா, கனிமொழி மற்றும் 60 மாணவா்கள் இதில் கலந்து கொண்டனா்.