தென்காசி
கிணற்றில் விழுந்த பசு மீட்பு
ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
ஆலங்குளம் காவலாகுறிச்சி புதூா் காலனியைச் சோ்ந்தவா் வைரவசாமி (69). இவருக்கு சொந்தமான பசு மாடு, மேய்ச்சலுக்குச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றில் விழுந்துவிட்டது.
தகவலின் பேரில், ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் விஸ்வநாதன் தலைமையில் வீரா்கள் சாகுல் ஹமீது, திருமலை குமாா், ஆனந்த குமாா், விவேக், தனசிங் ஆகியோா் பசுவை உயிருடன் மீட்டனா்.