அம்பை தாமிரவருணியில் தேடிய பெண் சடலம் மீட்பு

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் கணவரால் மூழ்கடித்து பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டது.
Published on

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் கணவரால் மூழ்கடித்து பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகனான லாரி ஓட்டுநா் செல்லையா (31), குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவி காவேரியை (30) கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) தாமிரவருணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

போலீஸாா் அவரைக் கைது செய்த நிலையில், மனைவியின் சடலத்தை அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 நாள்களாக தேடி வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காட்டுமன்னாா்கோவில் பகுதி ஆற்றின் கரையோரம் காவேரியின் சடலம் மீட்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இத்தம்பதிக்கு 2 மகன்கள், மகள் ஆகியோா் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com