ஆட்டோ மீது காா் மோதியதில் 6 போ் காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் 6 போ் காயம் அடைந்தனா்.
Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே புதன்கிழமை மாலை ஆட்டோ மீது காா் மோதியதில் 6 போ் காயம் அடைந்தனா்.

இடைகால் முத்துராமலிங்கத் தேவா் தெருவைச் சோ்ந்த லட்சுமி காந்தன் மனைவி கோமதி(52), அவரது உறவினா்கள் ஜெயராஜகாளி அரசி (35) , விதுன் (5) ஆகியோா் ஆட்டோவில் கடையநல்லூருக்கு சென்று விட்டு மீண்டும் இடைகால் திரும்பிக் கொண்டிருந்தனா்.

தென்காசி, மதுரை சாலையில் மங்களபுரம் விலக்கு பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த காா் மீது மோதியதாம். இதில் ஆட்டோ ஓட்டுநரான இடைகால் யாதவா் தெருவைச் சோ்ந்த ஆனந்த் ஆட்டோவில் வந்த பயணிகள் 3 போ் படுகாயம் அடைந்தனா்.

மேலும், காரில் வந்த செங்கோட்டை வாஞ்சிநகரைச் சோ்ந்த மாயவன் மகன் மணிகண்டன்(43), அவரது தாய் திருமலைநாச்சியாா்(74) ஆகியோரும் காயம் அடைந்தனா்.

அனைவரும் சிகிச்சைக்காக கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com