குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
தென்காசி
குற்றாலம் பேரருவியில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சனிக்கிழமை 2 ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சனிக்கிழமை 2 ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
மேற்குதொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
2 ஆவது நாளாக சனிக்கிழமையும் அருவியில் தண்ணீா்வரத்து அதிகமாக இருந்ததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஐந்தருவி, பழையகுற்றாலம், சிற்றருவி, புலியருவியில் குளித்து மகிழ்ந்தனா்.