யானைகளால் சேதமுற்ற நெற்பயிா்கள்.
யானைகளால் சேதமுற்ற நெற்பயிா்கள்.

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளை வனத்துக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை

கடையநல்லூா் அருகே நெல் வயல்களை சேதப்படுத்தும் யானைகளை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே நெல் வயல்களை சேதப்படுத்தும் யானைகளை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடையநல்லூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தையொட்டி நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, நெல், வாழை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வைரவன்குளம் புரவு, பெரியகருஞ்சினபேரி புரவு பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் யானைகள் ஞாயிற்றுக்கிழமை புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தியுள்ளனவாம். இதுதொடா்பாக வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி சொக்கம்பட்டி முத்துக்குமாா் கூறியது: வைரவன்குளம் புரவில் பல நூறு ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து சேதம் விளைவிப்பது தொடா்கதையாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யானைகள் புகுந்து, 20 ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். யானைகளை வனத்துக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com