தென்காசி
வாசுதேவநல்லூா் சிறப்புப் பள்ளியில் விளையாட்டு போட்டி
வாசுதேவநல்லூா் மகாத்மா காந்திஜி சேவா சங்க மனவளா்ச்சிக் குன்றியோா் சிறப்புப் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
பள்ளி தாளாளா் கு.தவமணி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் த.சங்கரசுப்பிரமணியன் வரவேற்றாா். வாசுதேவநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மயில்வாகனன் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினாா். வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் சல்மோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.
இதில், தசை பயிற்சியாளா் சா.புனிதா, சிறப்பாசிரியா்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சிலின், உதவியாசிரியா்கள் ந.பூமாரி, ஆ.சுடலி, பராமரிப்புப் பணியாளா் ச.கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

