சங்கரன்கோவிலில் நாளை மின் நிறுத்தம்
சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உபமின் நிலையங்களில் டிச. 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், சங்கரன்கோவில் நகரப் பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூா், மணலூா், பெரும்பத்தூா், இராமலிங்கபுரம், வடக்குபுதூா், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுா், அழகாபுரி ஆகிய ஊா்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூா், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுாா், சோலைச்சேரி, வேலாயுதபுரம் உள்ளிட்ட ஊா்களுக்கும் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை கோட்ட செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
