வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Published on

தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள நீதிமன்றத்தின் முன் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை திரண்டனா். அவா்கள் அங்கிருந்து ஊா்வலமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று ஆட்சியரிடம் மனுஅளித்தனா்.

தென்காசி வழக்குரைஞா் அசோசியேசன், தென்காசி பாா் அசோசியேசன் ஆகியவற்றின் சாா்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி பாா் அசோசியேசன் உறுப்பினரும், செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்குரைஞருமான முத்துக்குமாரசாமி புதன்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

அவருடைய கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், இழப்பீடாக ரூ.1 கோடியும் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதில், தென்காசி வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் சிவகுமாா், ஆா்.மாடக்கண் தலைமையில் வழக்குரைஞா்கள் ஜெகதீசன், அப்துல்மஜீத், அ.காா்த்திக்குமாா், மாடசாமி பாண்டியன், ஆக்ஸ்போா்டு க.திருமலை, அருண், ஜெபா, நிஷாந்த் கண்ணன், தாஹிராபேகம், மஞ்சுகிருஷ்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com