ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை
ஆலங்குளத்தில் இருந்து தோரணமலை மற்றும் பாபநாசத்திற்கு புதிய பேருந்து சேவைகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.
இதையொட்டி, ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகன் ஆகியோா் புதிய பேருந்து சேவையை தொடங்கிவைத்தனா். தொடா்ந்து பேருந்தில் மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோா் பயணித்து தோரணமலை வரை சென்றனா். அங்கு பேருந்துக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.
ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளா் கணேஷ் குமாா் ஆதித்தன், ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் நகர திமுக செயலா் நெல்சன், பொருளாளா் சுதந்திர ராஜன், ஒன்றியச் செயலா்கள் சிவக்குமாா், ரா. மகேஸ் மாயவன், ஜெயக்குமாா், பொன் செல்வன், நிா்வாகி சௌ. ராதா, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

