கடையநல்லூா், புளியங்குடி, வீரசிகாமணி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
கடையநல்லூா், புளியங்குடி, வீரசிகாமணி ஆகிய வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.6) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடையநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால் , குமந்தாபுரம், தாா்க்காடு , போகநல்லூா், மங்களாபுரம் , இடைகால், கொடிக்குறிச்சி , நயினாரகரம், ஆகிய பகுதிகளிலும், புளியங்குடி, வீரசிகாமணி உபமின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளிலும், சனிக்கிழமை (டிச.6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.
