தென்காசி
சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, புதன்கிழமை சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
முன்னதாக சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணா், கோமதி அம்பாள் ஆகிய சந்நிதிகளுக்கே எதிரே பிரதான சாலையில் 3 சொக்கப்பனைகள் அமைக்கப்பட்டன. இரவு கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி சொக்கப்பனை அமைக்கப்பட்ட இடத்துக்கு வந்தனா். அங்கு சிறப்பு தீபாராதனைக்குப் பிறகு 3 சொக்கப்பனைகளும் ஏற்றப்பட்டது.
