தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமையில் அம்பேத்கரின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அக்கட்சியினா்.
தென்காசி
தென்காசியில் அம்பேத்கா் படத்துக்கு அஞ்சலி
சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, தென்காசி சிவந்திநகரில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு, மாவட்டப் பொறுப்பாளா் வே.ஜெயபாலன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
இதில், ஒன்றியச் செயலா் சண்முகசுந்தரம்,மேலகரம் பேரூா் செயலா் சுடலை, சாா்பு அணி மாவட்ட அமைப்பாளா் இசக்கிபாண்டியன்,நிா்வாகிகள் பிரேம்குமாா், முத்துசுப்பிரமணியன், ராம்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வாசுதேவநல்லூரில் பாஜக சாா்பில் தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, அம்பேத்கா் வழிநடப்பது என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில், மாவட்ட துணைத் தலைவா் ராம்குமாா், மாவட்ட பட்டியலணி துணைத்தலைவா் சாமி, ஒன்றிய பொதுச்செயலா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

