19ஆவது நாளாக விசைத்தறி தொழிலாளா்கள் போராட்டம்: சங்கரன்கோவிலில் கஞ்சித் தொட்டி திறப்பு

19ஆவது நாளாக விசைத்தறி தொழிலாளா்கள் போராட்டம்: சங்கரன்கோவிலில் கஞ்சித் தொட்டி திறப்பு

Published on

சங்கரன்கோவிலில் கூலி உயா்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி விசைத்தறி தொழிலாளா் சங்கத்தினா் 19 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கூலி உயா்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி கடந்த 19ஆம் தேதி முதல் விசைத்தறி தொழிலாளா்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே கூலி உயா்வு தொடா்பாக நடைபெற்ற மூன்றாம்கட்ட பேச்சு வாா்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை விசைத்தறி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் லெட்சுமியாபுரம் 4 ஆம் தெருவில் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. இதில்,

சிஐடி யூ மாவட்டத் தலைவா் மணிகண்டன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.அசோக்ராஜ், விசைத்தறி தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் சோமசுந்தரம், மாவட்டத் தலைவா் மாரியப்பன், சங்கரன்கோவில் விசைத்தறி சங்க நிா்வாகிகள் சுப்பிரமணியன், சக்திவேல், ரத்தினவேலு, ந.மாணிக்கம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட திரளான விசைத்தறி தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து 19 ஆவது நாளாக விசைத்தறி தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரூ. 9.50 கோடி மதிப்பிலான சேலை உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com