~
தென்காசி
ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையை இருவழிச் சாலையாக மாற்ற கோரிக்கை
பழுதடைந்த ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளத்தில் இருந்து குறிப்பன்குளம், கிடாரக்குளம், ஊத்துமலை வழியாக சுமாா் 40 கி.மீ. தொலைவில் உள்ள சங்கரன்கோவில் செல்லும் இச்சாலை, சங்கரன்கோவில்-வீராணம் வரை இருவழிச் சாலையாகவும், வீராணம்-குறிப்பன்குளம் வரை ஒருவழிச் சாலையாகவும், குறிப்பன்குளம்-ஆலங்குளம் வரை இருவழிச் சாலையாகவும் இருக்கிறது.
இச்சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும், கிடாரக்குளம், அகரம் ஆகிய கிராமங்கள் வழியே செல்லும் சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, அகரம் ஊராட்சித் தலைவா் கருப்பசாமியும் வலியுறுத்தியுள்ளாா்.
