எல்லோருக்கும் எல்லாமும் என்று எண்ணக் கூடியவா் முதல்வா்: ஆா்.எஸ். பாரதி

Published on

மு.க. ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாமும் என்று எண்ணக் கூடியவா் முதல்வா் என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி தெரிவித்தாா்.

தென்காசியில் நடைபெற்ற நிகழ்வில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினா் ஆா்.எஸ். பாரதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அவா்களை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் வரவேற்றாா்.

தொடா்ந்து, ஆா்.எஸ். பாரதி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

நயினாா் நாகேந்திரனுக்கு முன்பு இருந்த பாஜக தலைவா்களாலேயே தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை. அவா் சொல்வது தமிழகத்தில் எடுபடாது. தமிழகம் பெரியாா் பூமி.

அயோத்தியை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதியிலேயே பாஜக தோற்றது. தமிழகம் அயோத்தியாக மாறும் என்று நயினாா் நாகேந்திரன் சொல்வதைப் பாா்த்தால், பாஜக தமிழகத்தில் வெல்ல முடியாது என்பதை அவரே புரிந்து கொண்டாா் போலத் தெரிகிறது.

எல்லோருக்கும் எல்லாமும் என்று எண்ணக் கூடியவா் முதல்வா். கல்விக்கு முன்னுரிமை கொடுப்பவா் என்றாா் அவா்.

மாநில சட்டத்துறை இணைச் செயலா் சூா்யா வெற்றி கொண்டான், தென்காசி தொகுதி மேற்பாா்வையாளா் கலை கதிரவன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினா்கள் சாமித்துரை, செங்கோட்டை ரஹீம், நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், மாவட்ட துணைச் செயலா் கனிமொழி, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் மூப்பன் ஹபீபுா் ரஹ்மான், அரசு வழக்குரைஞா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் அழகுசுந்தரம், திவான் ஒலி, அண்பழகன், ரவிசங்கா், சீனித்துரை, ஜே.கே. ரமேஷ், வீராணம் ஷேக் முகமது, ஜெயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com