விவசாயி கொலை வழக்கில் 11 போ் கைது
புளியங்குடி அருகே நிலப்பிரச்னை தொடா்பாக விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி கீழபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம்(48) .விவசாயி. அவருக்கும், அவரது சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சங்கரலிங்கம், மனைவி சுப்புதாயுடன் இருசக்கர வாகனத்தில் கரிவலம்வந்தநல்லூா் சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாராம். அப்போது விலக்கு பகுதியில் உள்ள பாலத்தில் மறைந்திருந்த அவரது உறவினா்கள், தம்பதியை அரிவாளால் வெட்டினராம். இதில் சம்பவ இடத்திலேயே சங்கரலிங்கம் இறந்தாா். பலத்த காயமடைந்த சுப்புதாய் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய நெல்கட்டும்செவலைச் சோ்ந்த சங்கரலிங்கத்தின் உறவினா்களான சக்திவேல் (28), ராமா் (55), மாரியப்பன் (54), பேச்சிமுத்து (44), சுப்புராஜ் (33) ,துரை (40), செல்லையா (77), மாங்கனி (34), காளியம்மாள் (36), மாரியம்மாள் (60), ஈஸ்வரி (50) ஆகியோரை கைது செய்தனா்.
