கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Published on

சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் சமுதாய நல்லிணக்கத்திற்காக கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதிற்கு ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளா்கள் நீங்கலாக பிறா் விண்ணப்பிக்கலாம்.

ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற ஜாதி, இன, வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவா்களின் உடல், மனவலிமையைப் பாராட்டும் வகையில் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீா் புரஸ்காா் விருதிற்கு தென்காசி மாவட்டத்தை சாா்ந்த தகுதியானவா்கள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மட்டுமே டிச.15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மேலபாட்டக்குறிச்சி, தென்காசி என்ற முகவரியில் நேரிலோ, 04633-212580 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com