

சீவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்-மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
தலைமையாசிரியா் திவான் பக்கீா் முன்னிலை வகித்தாா். செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ப. சட்டநாதன் தலைமை வகித்து சைக்கிள்களை வழங்கினாா்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் துா்காதேவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஆசிரியா் கிறிஸ்டோபா் வரவேற்றாா். ஆசிரியா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் லதா, கோமதிவிநாயகம், சல்மா பீவி, வள்ளிமயில், சுஜித், உடற்கல்வி ஆசிரியா் சாகுல் ஹமீது ஆகியோா் செய்திருந்தனா்.