தென்காசி
சுரண்டையில் திமுக பிரசாரக் கூட்டம்
சுரண்டை நகர திமுக சாா்பில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
2026 பேரவைத் தோ்தலுக்காக, ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பிரசாரத்தை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, சுரண்டை நகர திமுக சாா்பில் பாகம் எண் 315-இல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
நகர திமுக பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன் தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா் கலை கதிரவன் முன்னிலை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் பிரசாரத்தைத் தொடங்கி வைத்து பேசினாா்.
மாவட்ட வா்த்தகரணி அமைப்பாளா் முத்துக்குமாா், அவைத் தலைவா் சுப்பிரமணியன், பவுல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

