மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை

Published on

தென்காசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில், சட்டமன்ற தோ்தலுக்கு முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை பணிகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் இப்பணிகளை தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: அறையில் வைக்கப்பட்டுள்ள 2848 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2466 கட்டுப்பாட்டு கருவிகள்,2551 வாக்கு செலுத்தியதை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. பெல் நிறுவனத்தின் பொறியாளா்கள் மேற்கொண்டு வரும் இப்பணியானது, 10 அல்லது15 நாள்களுக்குள் நிறைவடையும்.

தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 89 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 சதவீத பணிகளும் டிச. 16 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் போது நிறைவடைந்து 100 சதவீத பணிகளும் நிறைவு பெறும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com