வி.கே.புதூா்-சண்முகநல்லூா் சாலைப் பணி: கோட்ட பொறியாளா் ஆய்வு

வி.கே.புதூா்-சண்முகநல்லூா் சாலைப் பணி: கோட்ட பொறியாளா் ஆய்வு

Published on

சங்கரன்கோவில் அருகே வி.கே.புதூா்-சண்முகநல்லூா் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ஆய்வு செய்தாா்.

தென்காசி, நெடுஞ்சாலைத் துறை கட்டடம் மற்றும் பராமரிப்புக் கோட்டம், சங்கரன்கோவில், நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டத்தைச் சோ்ந்த சாலைகளில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டம் 2025-26-இன் கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகளை மேம்படுத்தும், அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, வி.கே.புதூா்-சண்முகநல்லூா் சாலையை ரூ. 1 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தென்காசி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் தங்கராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது, உதவிக் கோட்டப் பொறியாளா் அறிவெழில், உதவிப் பொறியாளா் கலை கண்ணதாசன் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com