சங்கரன்கோவிலில்
மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் முகாம்

சங்கரன்கோவிலில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் முகாம்

Published on

சங்கரன்கோவிலில் திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட கோட்ட மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் முகாம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி பங்கேற்று பொதுமக்கள் அளித்த புகாா்களுக்கு உடனடியாக வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பின்னா், அவா் பேசியதாவது:

டிசம்பா் மாதம் மின் சிக்கன வார விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். பள்ளி மாணவா்கள் மத்தியில் மின் சிக்கன விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். சங்கரன்கோவில் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கவும், மக்களிடையே சூரியஒளி மேற்கூரை மின் உற்பத்தி அமைப்பது, அதன் பயன்கள், மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் மின் தொடா்பான உதவிக்கு மின் செயலி (பசடஈஇக ஞஊஊஐஇஐஅக அடட) மூலமும், தமிழ்நாடு மின் பகிா்மான கழக சமூக வலைத்தளங்கள், திருநெல்வேலி மின்தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 94458 59032, 94458 59033, 94458 59034, மின்னகம் மின் நுகா்வோா் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடா்பு கொண்டு குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில் கோட்டச் செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம், உதவி மின்பொறியாளா் கருப்பசாமி, இளநிலை பொறியாளா்கள், மின்பாதை ஆய்வாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com