ஆலங்குளம் அருகே மேளக் கலைஞா் மீது தாக்குதல்

Published on

ஆலங்குளம் அருகே கோயில் கொடை விழாவுக்கு வந்த மேளக் கலைஞரைத் தாக்கிய இருவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் கிராமத்தில் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், பாப்பான்குளம் மாடசாமி மகன் பாலகணேசன் (41) உள்ளிட்ட மேளக் கலைஞா்கள் மேளம் வாசித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிவலாா்குளம் முருகன், பாலுக்குட்டி இருவரும் தகராறில் ஈடுபட்டு, பால கணேசனை தாக்கினராம். இதில், அவரின் தலையில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த ஆலங்குளம் போலீஸாா் மேளக் கலைஞரைத் தாக்கிய இருவரையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com