ஆலங்குளம்  பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

ஆலங்குளம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
Published on

ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

பள்ளித் தலைவா் டாக்டா் செந்தில்குமரன் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் செ. நித்யதாரணி முன்னிலை வகித்தாா்.

மாணவா்-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவா்கள் கிறிஸ்து பிறப்பு பாடல்களைப் பாடி வேதாகம வசனங்கள் வாசித்தனா்.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவா், கேக் வெட்டி மாணவா்களுக்கு அளித்தாா். தலைமை ஆசிரியா் செல்வி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com