சங்கரன்கோவிலில் திமுக ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவிலில் திமுக ஆலோசனைக் கூட்டம்

Published on

சங்கரன்கோவில், டிச. 12: தென்காசி திமுக வடக்கு மாவட்டம் சாா்பில், ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பிரசாரத்தின் கீழ், வடக்கு மாவட்ட திமுகவினா் களப்பணியாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் கோ. சுப்பையா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ச. தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவரணி துணைச் செயலா் செண்பக விநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், வடக்கு மாவட்ட செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ பங்கேற்றுப் பேசினாா்.

மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலா்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, ஒன்றியச் செயலா்கள் பி. சங்கரபாண்டியன், கடற்கரை, பொன் முத்தையா பாண்டியன், பெரியதுரை, பால்ராஜ், ராமச்சந்திரன், வெள்ளத்துரை, கிறிஸ்டோபா், அன்பரசு, சோ்மத்துரை, நகரச் செயலா்கள் மு. பிரகாஷ், அந்தோணிசாமி, நாகூா் கனி, பேரூா் செயலா்கள், குருசாமி, ரூபி பாலசுப்ரமணியம், மாரிமுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் கிஃப்ட்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com