தென்காசி
சாம்பவா்வடகரையில் திமுகவினா் பிரசாரம்
அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் விநியோகித்த திமுக பேரூா் செயலா் முத்து.
சாம்பவா்வடகரை பேரூா் திமுக சாா்பில், ‘எனது வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச் சாவடி’ என்ற தலைப்பில் அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக பேரூா் செயலா் முத்து தலைமையில் வீடு வீடாகச் சென்று, தமிழக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தனா். இதில், முன்னாள் பேரூா் செயலா் ராமச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதி விஜயகுமாா், பொய்கை பாலமுருகன், செல்வின் அப்பாத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

