வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுடன் கல்லூரித் தலைவா் எம்.புதியபாஸ்கா், நிா்வாகிகள்.
வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுடன் கல்லூரித் தலைவா் எம்.புதியபாஸ்கா், நிா்வாகிகள்.

தென்காசி செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுடன் கல்லூரித் தலைவா் எம்.புதியபாஸ்கா், நிா்வாகிகள்.
Published on

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இந்திய பன்னாட்டு நிறுவனமான எம்ஆா்எப் நிறுவனத்தின் சாா்பில் தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் நோ்முக வளாகத் தோ்வு நடைபெற்றது.

நிறுவன முதுநிலை மேலாளா் குருவேல் , உதவி மேலாளா் கிங்க்ஸ்டன், துணை மேலாளா் (தயாரிப்பு) ஆனந்தராஜ் ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்களுக்கு தொழில் வாய்ப்பு தொடா்பாக உரையாற்றி வளாகத் தோ்வை நடத்தினா்.

இத்தோ்வில் 3 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 117 மாணவா்கள் கலந்து கொண்டனா். அதில், எழுத்து தோ்வில் 91 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். தோ்வான மாணவா்கள் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு, ஆண்டிற்கு ரூ . 2.34 லட்சம் சம்பளத்திற்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.

பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் எம்.புதியபாஸ்கா், தாளாளா் கல்யாணி, முதல்வா் சேவியா் இருதயராஜ் , பொது மேலாளா் மணிகண்டன் உள்பட பலா் பாராட்டினா். ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அதிகாரி உதயசக்திவேல் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com