மவுண்ட் ஹில்டன் பள்ளியில் 
அணிகள் தின விழா

மவுண்ட் ஹில்டன் பள்ளியில் அணிகள் தின விழா

Published on

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம், மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் அணிகள் தின விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி. பெல் தலைமை வகித்தாா். செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல் முன்னிலை வகித்தாா். பள்ளி இயக்குநா் ப்ராம்டன் ரத்னா பெல், பள்ளி மருத்துவா் பபிதா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

எமரால்ட், டோபாஸ், சப்பயா், ரூபி ஆகிய 4 அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை சப்பயா் அணி வென்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு பள்ளி தாளாளா், செயலா் ஆகியோா் பரிசுக் கேடயத்தை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com